vendredi 9 mars 2018

துச்சாதணன் தோற்றானடி ...


பட்டாடை களைந்து
துகிலாடை உடுத்திய
பூமி பெண்ணே...

அங்கம் மின்னுதடி
ஆதவன் வருகின்றான்
அணைத்திடத்தானே...

மெல்லினமும் புள்ளினமும்
வெட்கத்தில் விழி மூட
இடையினம் தேடி
அவன் உன் சேலை பற்ற
துச்சாதணன் தோற்றானடி
அபயம் கண்ணா என்றே
உன் நா உளறவில்லை
அவனும் பள்ளி அறையில்
பாமா ருக்மணியும்
பாகப் பிரிவினையில்

ஆதவன் அணைக்க நீ சிலிர்க்க
பசும் புல்லும் தலை நனைக்க
அரும் புதிரந்து மொட்டவிழ்ந்து
இளமை ஊஞ்சல் ஆடுகிறாய்

புள்ளினங்கள் விழித்ததினால்
மெல்லினம் உனை விலகி
அந்தி சாய்த்து அத்தசாமம் வாறேன் என்றே
அன்னம் தூதனுப்பி ஆரணங்கே போறான்டி

மஞ்சழ் பூசி குளித்து மதியில் தலை சீவி
விடி வெள்ளி முளைக்கும் முன்னே
வடிவழகே விழித்திரு
விடியலாய் வாறேன் எங்கிறான்
விடை கொடு பூமி பெண்ணே
விபரீதம் வேண்டாம் வேண்டாம்
தடை சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...