தீண்டத் தகாதெனும் தீண்டாமை ஒளிக – மனம்
தாண்டி பறக்கினும் மாசுறு களைக
தெளிவுறு தேடல் அங்கம் கொள்மிகையிலும்
பங்கம் உறா நிலை நீவி பார்க்கும் விழிகளே உய்க...
இடையும் கொடியும் சடையும் துடையும்
மடல் வாழை மச்சமும் புனையும் கவிகாள்
பரப்பளவு தேகம் பரிந்துரை கேட்கிறதே
இச்சகத்தில் இதற்கேன்
இன்னும் கவி இல்லை
முப்பாலும் தந்த கம்பன் கவி படித்து
காளிதாசனும் கண்ணதாசனும்
எழுதா கவி எழுதி தாருவீர் காண்
அக்கவி வையகம் மெச்சும் எனில்
இப்பரப்பில் பச்சை குத்தி நாளை வாறேன்
தாண்டி பறக்கும் மனமே இறக்கை விரியாதே
மேனி பூக்களை தேனீக்கள் கடித்ததால்
காயம் ஆற காற்றுக்கு தூது விட்டேன்
தீண்டத் தகாதெனும் தீண்டாமை ஒளிக – மனம்
தாண்டி பறக்கினும் மாசுறு களைக
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...