சிற்பி செதுக்கா பொற் சிலையே
சித்தம் சிதைந்தே சித்திரம் சிரிக்கிதடி
ஆடாமல் ஆடுகிறாய் ஆனந்தம் ஏதும் இல்லை
ஒளித் தூரிகை தீபத்தின்
எண்ணை இல்லா திரி நீயே
கொள் முதல் கொள்ளாமலே
உயிரே உயிரே என உடல் உரசி
கொள்ளை இடும் உலகிது தங்கமே
இல்லாத இளவு வீட்டில்
ஒப்பாரி கேட்கிதென்று இரங்காதே
சீதன கொள்வனவில் சீதா எங்கிறார்
சீர் திருத்தவானும் சேதாரம் சேர்கிறார்
தேடலில் உன்னருகே
எரியுதிங்கே சிகப்பு விளக்கு
கூடலில் நீயே குத்து விளக்கு
தயங்காதே தங்கமே
மாற்று குன்றா தங்கம் பெண்ணே
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...