jeudi 15 mars 2018

வாசலிலே வாச மல்லி


கூரை வேஞ்சு குந்த வைச்ச ஓலை குடில் கோடியிலே
பந்தல் காலு நாலுதான்டி பாசமுள்ள என் பிறப்பே
புகுந்த வீடு வா எங்க பிறந்த வீடு தனியே விட்டு
போறாளே பெட்டை பிள்ளை
காயம் பட்ட வெள்ளச்சி போல

குமரி இங்கே சிறை இருந்தா
பாசம் எல்லாம் வேசம் என்பார்
குறும்பாடு சந்தைக்கு போனா
ஏலக் கூறு விரலில் சொல்வார்
என்ன விலை உன் பாசமடி
விலையேது நீ தங்கமடி
என்னுசிரே எங்கே இப்போ
உன் அண்ணன் கூடு தனிச்சிடுச்சே

காலையிலே சேவல் கூவ காதகத்தி நீர் தெளிப்பே
கறுப்பன் மாடு கத்துதேண்ணு காம்பழுத்தி பால் கறப்பே
ஏரெடுத்து நான் வயல் காடு போக
வாசலிலே, வாச மல்லி போலிருப்பே
உச்சி வெயில் வதைச்சாலும் கஞ்சி கொண்டு நீ வருவே
உள்ளங்கால் கொதிப்பினிலே உள்ளம் நொந்து உனை சுமப்பேன்
கொலு சொலி கேட்கலையே கோல மயிலே உன் ஆடலெங்கே

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...