mardi 20 mars 2018

அம்மா உன் அன்பன்றி அருட் காதலா !!!


அம்மா உன் அன்பன்றி அருட் காதலா
தெருக் கோயில் தெய்வங்கள்
உனக்கீடாகுமா

கருவில் உயிரூட்டி மொழியாகி நின்றாய்
உலகில் எனை ஈர்ந்து அருள் வடிவானாய்
உயிரே உன் உதிரம் பாலாக வார்த்தாய்
நோய் என்று வீழ்ந்தேன் விழி மூட மறந்தாய்
இமை இரண்டு இருந்தும் இமையாக காத்தாய்

அம்மா உன் அன்பன்றி அருட் காதலா
தெருக் கோயில் தெய்வங்கள் உனக்கீடாகுமா
படையாறு வீடு உனக்கில்லை அம்மா
உன் பசியாற்றி மடிதூங்க மகனானேன் தாயே
தேனுண்டு மகிழ்ந்தால் திகட்டாது தேகமே
தாயன்பு எனக்கு பாற்கடல் அமுதமே
உயிரே உயிர்தர வரமிங்கு தரவேண்டும்
நீ இல்லா உலகு எனக்கெதற்கு வேண்டும்

அம்மா உன் அன்பன்றி அருட் காதலா
தெருக் கோயில் தெய்வங்கள் உனக்கீடாகுமா

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...