கண்ணிலே என்ன ஈரம் கனவெல்லாம் காணாத்தூரம்
நெஞ்சிலே என்ன பாரம்
இது வஞ்கர் வாழும் காலம்
எண்ணிலா கொடு நிலை அள்ளியிடும் கொடியவரிங்கே
ஏது செய்வேன் எத்தனை தலையினை கொய்வேன்
இன்பங்கள் இழந்து இதயங்கள் இரும்பாச்சே
உயர் நிலை வித்தகரென உலா இங்கு வருகிறார்
செத்தவர் பிணங்களில் நின்றே உணவுண்கிறார்
உயர் நிலை உண்மையெலாம் ஆழ் குழியில் மூழ்கிதடி
நீலம் பூசிய நரிகளுக்கே தாழம் பூக்களும் சாட்சியடி
நித்திரை இமைப்பொழுதில் நீசர் விழி பறிக்கிறார்
பத்தரை பசும் பொன்னென்றே தமை
நா கூசா பொய் சொல்கிறார்
நெரிஞ்சுக் காடே நெஞ்சமடி அரிவாளே இவர்
விழிகளடி
குறிஞ்சி மலரே கலங்காதே அழிவொன்று அருகிருக்கு
ஆழிப்பேரலை எழுந்தேனும் அள்ளி உண்ணும்
இக் கலியுகத்தை
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...