சங்கத் தமிழ்த் தலைவா
சண்முகா சரவணா தேவர் குறை தீர்த்த முருகா
மழை வந்து கடலாகி வாழ்விடம்
முகம் துலைத்திருக்க
சூர சம்காரம் செய்ய எழுந்த
வடிவேல் அழகா
நீ ஆடும் களம் கண்டு பொய்
மேனி சிலிர்க்குதையா
போர் என்று எமைச் சூழ்ந்து
வதை செய்து உயிர் அறுத்த
முள்ளிக் கடலோரம் முருகா
ஏன் நீ வரவில்லை
நச்சிளைத்த குண்டு மழையில்
நீயும் மூச்சிளந்து போவாய் என்றோ
வள்ளி தெய்வானை அருகிருக்க
நடு இருந்து எமை மறந்தாய்
அஞ்ஞான அறிவினிலே அடம்
உற்று உளறவில்லை
முப்பாட்டனே முருகா எமை
தடுத்தாட் கொள்ள ஏன் மறந்தாய்
மறவோம் மறந்தறியோம் நீ
வரம் தரும்வரை
உன் திருப் பாதம் பற்றி
பின் தொடர்கின்றோம்
இத் தரணியிலே எமக்கொரு
தமிழீழம் வேண்டும்
முத் தமிழ்ச் சங்க முருகா
வெற்றி நிச்சயம் காண வேலெடுத்து வா...
Kavignar Valvai
Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...