mardi 10 novembre 2015

திரு நாள் எனும் தீபாவளி ....


ஒரு நாள் இன்பம் திரு நாள் எனும் தீப ஒளி நாளாகுமா...
தீப ஒளிச் சுடர் தினம் தினம் மிளிர்கின்றதா?
ஒளி காணும் விழி திறந்து இருள் அகற்றும் விளக்கேற்றி
சுடர் காணத் துடிக்குது நெஞ்சம்
ஒளி எங்கே தீபத் திருநாளிலும் காணோம்!
ஆண்டாண்டு வருகின்ற ஐப்பசித் திங்களிலே
துன்பங்கள் துலைந்தது ஒரு காலம்
இன்ப நிலை தந்தான் இறைவன் அன்னேரம்

நரபலி வேட்டையிலே நரகா சூரர்கள் இன்றும்
கொடுமை கழைய வரவில்லை ஏன்
புது யுகத்தில் இறைவன் இன்னும்
மாமரத்துப் பூக்களுக்கும் சிறைவாசம்
தாய் நிலத்தில் இல்லை சகவாசம்
தாய் எதிரில் பிள்ளை மலர் பிணக்கோலம்
பிரிவில் துவள்கிறாள் தமிழீழத் தாய் தினம் தினம்....
கலை மானும் கண் உறங்கும் வேளை
விழியை வேல் கொண்டு பறிக்கிறார் பாரில்
போர்க்களத்தின் காயங்கள் அல்ல
கள்வரின் கன்னக்கோல் செய்யும் கோலம்...

தீபாவளித் திருநாளிலும் தீயிலே வேகும் உடல் கண்டும்
சிவக்காத விழி இருந்தால் கூறும்?
இதயம் இடம் மாறிக் கிடக்கின்றது போலும்!
அக்கினிக் காற்றே நீ அலை அலையாய் எழுகின்றாய் தினம் தினம்
அமைதியில் இல்லை நெஞ்சம் வெங்களம் வெல்லும் நேரம்
தென்றலே எங்கள் சொந்தம்....
போய்விடு போய்விடு நீயும் தூரம்
தமிழீழ விடிவே எமக்கான தீப ஒளித் திருநாள் ஆகும் .....
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...