vendredi 22 juillet 2016

தம்பி, உனக்கொன்று சொல்வேன்!




தம்பி, உனக்கொன்று சொல்வேன்! - இந்தக்
தமையனின் மொழி கேட்பாய் ;
பாரடா, இன்று,நீ தாழ்ந்தாய்! - இந்தப்
பாரினில் உள்ள
மொழிக்குலம் யாவும் - தமிழ்
வேரினில் தோன்றின வன்றோ! - அது
வீழ்ந்து கிடப்பதும்
இழிவதும் நன்றோ?  (பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

அன்புடை அண்ணா அறிவோம் அறிவோம்
தாய்த் தமிழன்றி எமதுயிர் இங்கே மேலோ
வேற்றுடை மாந்தராய் வீதியில் வீழ்ந்தும்
வீறுடன் எழுந்தே வென்றோம் வென்றோம்
போர்க்கள நாயகன் கூறிய வேதத்தில்
தாய்த் தமிழ் மொழியை பாங்காய் விதைத்தே
தரணியில் தமிழ்குல உயர்வினை படைத்திட்டோம்
கூற்றுவன் அல்ல குரங்கென ஒருவன்
தரம் கெட்ட தமிழ் மானுடனாய் அவன்
தாவித் தாவியே பிணங்களில் ஏறியே
தன்னினம் தனையே அழித்திட்டான்
உரம் இட்ட நிலமும் மொழியும் கை விட்டுப் போனதண்ணா
போனவை போனதென பாடையிலே போகாது எம் மனசு
வாழ்வாங்கு வாழ்வதற்கே வரைமுறை வகுடெடுத்து  
செம்மொழி செப்பனிட்டு செந்நீரை பாச்சிவிட்டோம்
அஞ்சாதீர் அண்ணா தணியாது தணியாது அவனியில் தமிழ்த் தாகம்
ஓயாத அலையென மடிந்தாலும் மரணிக்காது எழுந்தே வருகின்றோம்
அன்புடை அண்ணா அறிவோம் அறிவோம்
தாய்த் தமிழன்றி எமதுயிர் இங்கே மேலோ மேலோ ....

பாவலர் வல்வை சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...