நாடற்றோர் என்றே ஈழத்தில் நடந்தேறிய யுத்தம் காண்
புரிந்துணர்வே இல்லாதாரோடு ஒருங்கிணைந்து
புரிந்துணர்வே இல்லாதாரோடு ஒருங்கிணைந்து
வாழ்தல் கேடே !!
அன்பே அறம் என்றான் புத்தன்
அன்பை கொன்றே ஆயுத பூசை
அன்பே அறம் என்றான் புத்தன்
அன்பை கொன்றே ஆயுத பூசை
செய்திட்டான் அவன் பக்தன்
பயங்கரவாத மிகை அழிப்பில்
பகவானின் தங்கப் பல்லிலும்
தமிழரின் ரெத்தம்!!
பயங்கரவாத மிகை அழிப்பில்
பகவானின் தங்கப் பல்லிலும்
தமிழரின் ரெத்தம்!!
கதிராடிய வயல் காடும் குடி
வாழ்ந்த மனை வீடும்
அலை அலையாய் ஓடி கரை தொடும் அந்த
முள்ளிக்
கடலும்
லெட்சம் உயிர் மாண்ட நெடி
பிரிந்து நீங்கவில்லை
நல்லிணக்க அரசென அவை ஆளுமை
ஏற்றி
அணு உலைக்குள் அவியுது
காண் இனச் சுத்தி ஈடேறி
விண் இறக்கையே நீ பிடித்த படங்களே
அகிலத்தின் சாட்சி
விழிகளே விழித்திருந்தும்
தணிக்கை எனும் தரப்படுத்தலுக்குள்
சுட்டு விரல்களும் சுறண்டப்
பட்டு முற்றம் எரியுது மீதி
சூரியனுக்கும் கருமை பூசும்
கிரணங்கள் இங்கே
போர் குற்ற மீறலின் ரெத்தக் குளத்தில்
சுண்ணாம்புக் கலவி
புத்த பகவானே உனக்களித்த வெள்ளமுதை உண்ணும் முன்
உன் தங்கப் பல்லை துடைத்துவிடு
அதில் காய்ந்து கிடக்கிறது
தமிழரின் சதையும் ரெத்தமும்!
போரில் மாண்ட பிருதுகளும்
பிறப்புரிமை கேட்கிறது
சுய ஆட்சி சுய நிர்ணயம் உள்ள
சுதந்திரம் எங்கே எங்கே ?
பாவலர் வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...