இதயச்
சுவருக்குள் துடிக்கும் வினாடிகள்
ஓசையின்
புலம்பலோடு
டக்
டக் என கடிகார முற்களாய்
ராச்சியத்தின்
பூச்சியத்துக்குள் !
நாளிகை முட்களோ
ஊடலும் கூடலும் கொண்டு
நவரசம் கொள்ள
ஆராதனைகள்
ஓயவில்லை
தீபாராதனைகளும்
தீய்ந்திடவில்லை
பாலாபிசேகம்
குளிக்கும் ஓட்டை வீட்டில்
தலைச்சரின்
சந்ததி ஜனனம் கொள்ள
நாள்
காட்டி இலக்கங்கள் நாளொன்றாய் கிளிக்கப் பட்டு
எமது
பிறப்பத்தாட்சி தனை எழுதித் தந்தே போகின்றன
படைக்கும்
எவனோ படைத்துக் கொண்டே இருக்கிறான்
காத்தல்
அழித்தல் என படைப்போடு உலகம்
அந்தரத்தில்
தொங்கினாலும் அது இன்னும் விழவில்லை
உலகின்
அச்சாணி யாரிடத்தில்?
யாம்
அறியோம் பரம் பொருளே!
பாவலர் வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...