நன்றிக்கு நன்றி நன்மை தரும் செய் நன்றி
கொன்றுவிட்டால்
உய்வின்றி ஊன் உருக்கி பொய் மேனி போகும் காடு
வள்ளுவனும் ஔவையும் எமக்களித்த ஏடெடுத்து
அரு மருந்தாய் குழைத்து துளியே பருகினேன்
குறளறம் எனை காத்து குடை நிழல் தந்து
பாவலனே வா என்கிறது !
தங்கத் தமிழ் சொற்களை கோர்த்தெடுத்து
சிந்தை பா செதுக்கி செந்தூர பொட்டும் இட்டேன்
அன்னை தந்தை விண்ணிருந்தே ஆசி தந்தார்
சிந்தை குளிர அவை
கண்டு நடக்கிறேன்
பண்டிதன் அல்ல
அவர்கள் பிள்ளை பண்புடையோனே !
பாவலர் வல்வை
சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...