mardi 26 juillet 2016

பாங்கொடு பாவில் பிறந்த பா !!!



வணக்கம் ஐயா,
வந்தவளை வரைந்து
சொந்தவளை மறந்து
எந்தவளைக் கொண்டு
வந்ததுயர் துடைப்பீர்?!

கொன்றது
அம்பு விழிகளா?
அன்றி அம்மாவின்
அன்பு விழிகளா ?
நின்று கூறுங்கள் -
உங்கள்
நெஞ்சைத் தொட்டு!

ஆகாகா...
அருமை ஐயா!
உள்ளத்தில் கள்ளமில்லை!
எண்ணத்தில் ஏய்ப்பில்லை!
கற்பனையில் களங்கமில்லை!
நல்லதொரு மாற்றம்!
நானிலம் போற்றும்!

வாழ்க இனிதே!..

தமிழும் குறளும் தமிழர்க்குக் கண்களாம்!

- அன்புடன் குறளோவியன் -
அன்புடையீர் வணக்கம் ஐயா குறளோவியனே,
அருமை அருமை என் பாட்டுக்கு எசப்பாட்டு
எதுகை மோனையில் கேட்டேன் கேட்டேன்
என் நெஞ்சம் பனி மலை காட்டில் !!!
வந்தவள் வடிவழகே ஆனாலும் சொந்தவளை கணமும் மறவேன்
இந்த இவள் இளஞ் சிட்டே என்றாலும் எனக்கென்ன
என்னவளும் இவள் வயதில் இவளைவிட மேலே
எந்தவளை கொல்லேன் என்றும் துணையாவேன்
வந்த துயரும் வரும் துயரும் வானளவே ஆனாலும்
அன்புடையாள் கரம் கோர்த்தே அறுபடை அறுத்து
இகபரம் மேவி இன்பம் காண்போம் நாம்.....
கலங்கேன் கணமும் உறையேன் என்றென்றும் வரைவேன் ஓவியம்
வந்தவளானாலும் வருகின்றவளானாலும்
வண்ண வண்ண விழிகளில் மை தீட்டி
புருவம் தனில் நாண் ஏற்றி எய்தே வரைவேன் வடிவளகை
பூங்காற்றும் புயல் காற்றும் என் காதலியே...
மகிழிழ்ச்சியொடு நன்றிகள் தந்தேனையா
ஏர்க்கவும் ஐயா குறளோவியனே... .... ...
அன்புடன் – சுயேன்.
வணக்கம் ஐயா,
தங்களின் மறுமொழியே
மற்றுமோர் கற்பனை
வளமாயிற்று!
எடுப்பான மொழிநடை!
தடுப்பார் யாருமிலை!
தொடருங்கள் உங்கள்
அ(ன்)ம்பு வீச்சை!

இனிய வாழ்த்துகள்

தமிழும் குறளும் தமிழர்க்குக் கண்களாம்!

- அன்புடன் குறளோவியன் -
ஐயா, மிக்க மகிழ்ச்சி ஐயா..
தாங்கள் வெறும் நாரல்ல!
மலர்களை நீக்கினால்
நாருக்கு மணமுமில்லை,
மதிப்புமில்லை! எனவே
தாங்கள் நாரல்ல, மலரே!!
மாறாத மணங்கொண்டு
ஏறாத மனத்தி லெல்லாம்
நிலையான இடங்கொண்டு
வளமான பழைமையும்
வற்றாத கேளிரும்
பெற்றபெரும் புலவரன்றோ
தாங்கள்!?
ஏடெலாம் பாடும்
என்றும் தங்களை!
நீடூ வாழ்க!

' தமிழ்' என்றால் தமிழ்நாடு என்றும் பொருள்!

அன்புடையீர் ஐயா குறளோவியனே, தாங்கள்
கூறும் தகமைகட்குடையவன் இவன் என்றால்
அது யான் பெற்ற பெரும் பேறே  
பேதம் அற்ற அறிவுடமை நீங்கள் அறிந்தேன் அறிந்து
அன்பிலார் அகத்திலும் அமுதெனும் தமிழ் ஊட்டுகிறேன்
ஐயன்மீர் நன்றி எனும் மூன்றெழுத்தை உங்களுக்களித்து
முக மலரானேன், நன்றி.. நன்றி... நன்றி.. அன்புடன்,சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...