ஏற்றம் பெற
ஏறு நீ ஏணிப்படி
ஏற வேண்டும்
எத்தனையோ படி
அன்னை தந்தை
ஆரம்பப் படி
அகர ஆசான்
அடுத்த படி
முழுமை
கடவுள் மூன்றாம் படி
நால்மறை
வேதங்கள் நற்துணை படி
பாச நேசம்
உயர்ந்த படி
மயக்க
கிறக்கம் மாயப் படி
இன்ப
துன்பம் வாழ்க்கை படி
வாழ்வில்
சொந்தம் வாசல் படி
காலம்
கனிந்தால் காதல் படி
காவேரி
கடப்பாள் கானல் படி
அன்பே சிவம்
எனும் ஆன்மீகப் படி
அறிவே
ஆகாசமெனும் விசாலப் படி
படிக்குப்
படி பாத அடி
உன்னை
எரித்தே தணியும் கோடை இடி
ஏற்றம்
காணலாம் ஏறு ஏறு
ஏற மறக்காதே
என்றும் தேசப் படி
உயர் நிலைதானே உன் உரிமைக் கொடி !
பாவலர் வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...