பட்டு வண்ணக் கலவை தொட்டு
றெக்கை கட்டும் பூவே
வெண்ணிலவை செதுக்கிய
வெண்டாமரை நீ
அந்திம இருள் கண்டு அஞ்சிக்
கிடந்தேனடி
அகல் விளக்காய் திகழ்ந்தே
அன்பொளி வீசுகிறாய்
அரும்புதிரும் அழகு வதன மலர்
தொடுத்து
பட்டு முத்தம் தருகிறாய்
விலைக்கா வாங்கினாய் சிரிப்பு
இல்லை
இல்லை உன் வயசில் அறிந்தேனடி
வீணே செலவு செய்தாலும் அள்ளக்குறையாது
அதன் இருப்பு
பஞ்சு விரல் பதித்து பனிக் குன்றில் என்னை
ஏற்றிவிட்டாய்
ஏகாந்த
வெளியில் மீண்டும் றெக்கை கட்டுதே என் மனசு..
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...