dimanche 3 juillet 2016

நேசம் உள்ள நெசவுக்காறன் !!!!



நேசம் உள்ள நெசவு ஆலை வெந்து நோகிறது மனசு
ஆடை நெய்யும் பாசக்காறன் நூலோடு நூலாகிறான்
புத்தாண்டும் பிறக்கிறது புத்தாடை அவனுக்கில்லை
காண ஒவ்வாத மழைக்கால அருந்ததியாய்
அவன் நெய்யும் புத்தாடைகளே
அவனை விட்டு பிரிந்து செல்கின்றன !

வண்ண வண்ண ஆடைகள் நெய்யும் அவனின் கூலி நூறு
வண்ணம் அழித்து எழிமை இருத்தி ஏற்றிச் செல்கிறது செலவு
அல்லும் பகலும் அனவரதமும் நாளைய வாழ்வே கேள்விக்குறி
வண்ணமாய் மின்னும் ஒவ்வொரு புத்தாடைகளும்
அவனின் ஓராயிரம் கண்ணீர்த் துளிகளால்
துவைத் தெடுத்து வெளுத்த பின்பே
புத்தாடைகளாய் அணிகிறோம் நாம் !

பாவலர் வல்வை சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...