மழைக்கால குளிரிலும் சூடான சுந்தரி நான்
அங்காடித் தெருவிலும் அன்போடு காத்திருப்பேன்
உன் உதடு உரச உரச கத கதப்பை ஊட்டுவேன்
காலை மாலையும் உனைச்சேர காத்திருப்பேன்
காதலா காதலா நின் காதல் நான் மறவேன்
நின் பணியுற்று நீ திரும்பும் போதும்
உன்னை காண விழித்திருப்பேன்
உதய கீதம் பாடுவேன்
இரவின் இனிமை சேருவேன்
உனக்காகவே பிறந்தவள் நான்
எனக்காக கொண்டுவா.. காசு.. காசு..
கல்லாவில் கடைக்காறன்
இனாமாக தரமாட்டான் என்னை!
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...