என் அழகே எனுயிரே
சம்பா அரிசி பால் அமுதே
நீ சிரித்தால்
சிதறுதடி சின்னச் சீரகம் !
பொங்கி எழுந்தால்
தோற்றதடி பெருங்காய ரசம்
நிறத்திலே நீ
குங்குமப் பூவனம்
உன் வனப்பிலே சுழலுதே
வாலிபச் சக்கரம்
அன்பிலே அள்ளி
ஊத்துகிறாய்
அனுதினம் சக்கரை
பாயாசம்
சமையலறைச் சந்தணமே
நாளை முதல் நிந்தித்து
விடாதே என்னை
குருமா குருமா குருமா
என்றே
சப்பாத்தியுடன் சட்ணி சம்பல்
அரைத்து
சொர்க்கமும் நரகமும் இரண்டும் உன்னோடுதான்
இன்னொருமுறை இக்கவி
சொல்லேன்
இடம் வலம் சுற்றேன்
சமயலறை
சிப்பந்தியுமாவேன்
இல்லத்தரசியே என்னில்
பாதி நீயே
இறுமாப்பு வேண்டாம் நீ
வேறு நான் வேறல்லடி
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...