lundi 20 juin 2016

நம்பிக்கைத் துரோகி நானே !!!



மெய்யெனும் ஒற்றைச் சொல்லே உலகின்
உயர் வேதம் என எப்படி எடுத்துரைப்பேன் 
ஈசனே இனி எங்கே உனை நான் காண்பேன் !
தீயினை சாட்சி வைத்து தாலிக்குள் தனை நிறுத்தி
தாரமாய் வந்தவளை ஏலத்தில் விற்ற எழியவன் நான்
அரசாளப் பிறந்தவனை அடிமை யென ஆக்கிவைத்து
கொடு நாகம் தீண்டி மாண்டு மயானம் வந்தவேளை
பிணக்கூலி கேட்டு பிணம் என பிள்ளையை உதைத்த
உணர்வற்ற சுடலையன் நான்
விதி எனச் சொல்லி வீண் வாதம் இனிச் செய்யேன்
ஹரிச்சந்திரன் எனும் நாமம் மெய்யுக்கு உவமானம்
நம்பிக்கைத் துரோகி நானே அவமானம்
பிடி சாம்பல் ஆகிவிட்டேன் - இனி
முடி ஆண்டு ஏது செய்வேன் ?

பாவலர் வல்வை சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...