களங்கப் பார்வையில் உள்ளங்கள் இல்லை
உயிர் வதை செய்யும் உளுத்தவர் இங்கில்லை
யாதி பேதம் கொள்ளும் மதயானைகள் இங்கில்லை
நிறங்களின் மறுப்பு இங்கில்லை
உயர்ந்தவர் தாழ்ந்தவர் இங்கில்லை
முதியவர் இளையவர் பேதம் இல்லை
ஆண் பெண் நட்பில் களங்கம் இல்லை
சமத்துவ பேதம் இங்கில்லை
இதுதான் சொர்க்கம் என்றால்
அதை இல்லை என்று நான் சொல்லவில்லை
வெண் பனித் தேசத்தின் வெண்
புறாக்களிடம்
வெண் மனங்களே வேலி இல்லை !
பாவலர் வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...