jeudi 16 juin 2016

வறுமை வாசகனின் பிரதிப் பக்கங்கள் !!!



உலகை தொடும் வல்லோன் ஒருவனே சூரியன்
உயிர் வதையின்றி நிலத்தடி நீர்க்குமிழிகளும்
மழை மேகம் தருகிறது விண்ணில் !

மதி கொஞ்சம் தளர்த்து மரண பயம் உறுத்தி
எம்மைத் தொட்டான் விதியெனும் ஊழியன்
வசந்த காலத் துளிர்கள் அறுகின்றன
உயிரோடு உடல் வதைகள் எரிகின்றன
நிர் மூலம் செய்கின்றான் இனச் சுத்தி ஆளுணன்
இயற்கை கூடலின் கீழ் இடமாற்ற அகதி நிலை

வறுமை எனும் வாசகன் பிரதிப் பக்கங்களை புரட்டப் புரட்ட
எங்கள் வீட்டுச் சோற்றுப்பானை சோம்பல் உற்றுவிட்டது
ஆனாலும் எல்லோருக்கும் வயிறெனும் உலை கொதிக்கிறது
அடை மழை தினம் தினம் விழிகளில் பொழிந்திட
திசை மாறிய பறவைகளாய் அலைகிறோம் அகதிகளாய்
துடிப்பறிந்தும் துயரங்கள் விலகவில்லை
தன் கூடு திரும்பவே தவிக்கிறது தமிழீழப் பறவைகள்....

பாவலர் வல்வை சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...