கஷ்டம்
என்று சிரிக்க மறந்து சிதைந்தவர் யாரோ யாரோ
சிரிச்சுக்கிட்டே
கஷ்டம் இல்லேன்னு சொல்லும்
வறியோர்
இங்குண்டோ !
கருவறை
நீச்சல் நீந்திய உயிருக்கு கஞ்சிக் கலயமும்
கனவே…. ! கனவே…. !
கடலின்
உப்பும் கண்ணீர் விழியும் உவர்ப்பில் என்றும்
ஒன்றே…. ! ஒன்றே…. !
வயித்தியன்
கூட பயித்தியம் ஆகிறான்
பயித்தியம்
கூட தரணி ஆள்கிறான்
பழுது
பார்த்து உழுத நிலம்தான் வாழ்ந்தவன் கூடு
வானம்
பாத்து வறண்டு கிடக்குதே விளைச்சல் காடு
நியங்களின்
நிழலும் கறுப்புக் கறுப்புத்தான்
நித்திரை
துயிலும் நித்தில இரவும் கறுப்புக் கறுப்புத்தான்
புரிஞ்சுக்காம
புரிஞ்ச புழுகன் பொய்யை மெய் என்கிறான்
மெய்யும்
பொய்யாய் சாகுதடா ! பொல்லா உலகு
சுத்துதடா !
போதும்
என்பேனா சாமி…. சாமி…. நீ நியம்தான் என்றால்
சமத்துவ உலகை காமி…. காமி….
பாவலர் வல்வை சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...