dimanche 12 juin 2016

நூல் வேலி !!!



ஓர விழி நூலில் என் சினேகம் கோர்த்தவளே
வெண் புரவி ஏறி எங்கே சென்றாயோ...
அன்றில்கள் விளையாடும் ஆனந்த இல்லம் விட்டு
பொன்னெழிலே போன இடம் நான் அறியேன்
சுட்டி விளக்கொளியில் உன் சுடர் முகம் காண்கிறேன்
விழி ஓடை நீரில் மனவோடம் கரையுதடி
எங்கோ போகிறேன் ஏனோ வாழ்கிறேன்
ஏனென்று புரியவில்லை
என் செய்வேன் என்னவளே !

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...