samedi 30 mai 2015

மரத்தில் மீண்டும் ஏறிவிடு ...


இதயம் இருக்கிறது இடப்புற நெஞ்சில்
உயிரின் சுவாசமே அதுதானே
மதம் எனும் பெயரால்
மனிதனை மனிதன் தின்பது
கொடிதே!
இதயம் இல்லாதவனை
இறைவன் இரட்சிப்பதில்லை
மரம் விட்டு இறங்கிய மனிதா
மதத்தில் நீ ஏறிவிட்டாய்
மானுடா உன்னால் மானுடர் அழிவு நிகழ்கிறது
மரத்தில் மீண்டும் ஏறிவிடு தூய்மை கொள்வாய்...
Kavignar Valvai Suyen

4 commentaires:

  1. அருமை...

    மத பித்து தெளிய வேண்டும்...

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மையை உரக்கச் சொன்னீர்கள் தனபால்...

      Supprimer
  2. மரத்தில் மீண்டும் ஏறிவிடு தூய்மை கொள்வாய்..

    RépondreSupprimer
    Réponses
    1. இறைவனின் படைப்பாகவே இருந்துவிடு அரிதாரம் எதற்கென்றீர்கள் அக்கா மகிழ்ச்சி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...