மகளிர்
மட்டும் என் மடியில்
நான்
பேசுவதில்லை !துள்ளி விழும் போதில்
நொந்து அழுவேன்
தரிப்பிடம் தனில் மட்டுமே
தணிப்புறுவேன் சினம் தனை...
சாரதியின் ஆணையில் துணுக்குற்று விழித்தேன்
முன் அமர்வினை முல்லைக்குக் கொடு என்றார்
ஏறியவள் அழகிதான்
என்றோ பாத்திருக்கிறேன்
இன்று பூத்திருக்கிறாள்...
விழியெனும் வண்டுகள் மனசெனும் இறகால்
தொடாமலே தொட்டன இந்தப் புது மலரை
தொடாத பாகங்களால் என்னைத் தொட்டு
அமர்ந்தாள் அந்த வண்ண மலர்
நொந்த என் மனசுக்கு
ஓராயிரம் முத்தங்கள் குவிந்தன
இரும் பென்றாலும் இதயம் உள்ளவன் நான்
தொட்டவளை கற்புக்கரசியாகவே
அவளின் தரிப்பிடத்தில் விட்டுச் செல்கிறேன்...
Kavignar Valvai Suyen
கனவா நினைவா
RépondreSupprimerமயக்கம் தரும் வரிகள்
நன்று நன்று.
நியமான வரிகளே சககோதரி வேதாக்கா..... தங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வினை கண்டு மயங்கினேன் மகிழ்ந்தேன் நல்லாசியும் உரைத்தேன் அழகுத் தமிழ்கலையே வாழ்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு மென்மேலும் சிறந்தோங்கட்டும் தங்கள் பணி.....
Supprimer