உனக்கும் எனக்கும் இடையிலோர் கணக்கு
சேர்ந்தே வாழ்கிறோம் இது கூட்டல்அமுதூட்டி அன்பு செய்தார் தாய் தந்தை
அவர்களின் மரணத் தூது வந்து சொன்னது-
கழித்தல்
பந்த பாச வடம் இழுத்து சந்ததி தந்தார்-
பெருக்கல்
கூடு விட்டு ஆவி போகும் நேரம்
பிய்த்தெறிந்தது உறவின் நெஞ்சை-
பிரித்தல்
கணக்குப் போட்டு வாழ்ந்தோர்கள்
இணக்கப்பாடு தீரும் முன்னே
இழுத்துச் செல்லும் இறுதிப் புள்ளி-
பூச்சியம்
எத்தனை முகவரி எத்தனை வடிவங்கள்
எங்கே இருந்தாலும்
எல்லோர்க்கும் இறுதி முகவரி ஒன்றே ஒன்றுதான்
அது மயானம்.....
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...