முல்லையின் எல்லை தாண்டி தொடுகிறாய் என்னை நீ
அந்த ஒருநாள் ஒரு நொடிப்பொழுதே பார்த்தேன் உன்னை
நினைவலையாகி நின் நிழலாகி
அறிகிறேன் உன் வரவின் காலடி ஓசை
கடல் தாண்டிய காற்றின் சிறகில் உப்பிருக்கும்
என்னை தாண்டிய காற்றில் உன் சுவாசம் நுகர்ந்தேன்
உயிரில் கலந்து உணர்வில் மிதந்து உன் நினைவலைதானே உயருதடி
அன்பெனும் ஆளம் எதுவரை என்பதை அறியேன் இன்னும் நான்
ஆழ் கடல் மூழ்கி அள்ளிவந்தேன் முத்துக்களை உனக்காக
ஆயிரம் வாசல் இதயம் வேண்டேன்
நீ குடியிருக்க
வருவதென்றால் ஒரேவாசல் ஒரேஇதயம் தந்துவிட்டேன்
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...