mercredi 10 février 2016

அந்த இராத்திரிகளுக்கு சாட்சி இல்லை….



மலரோடு இதயம் மனசுக்கில்லை கோபம்
காதலெனும் சொந்தம் காலாவதியாகி விடுவதால்
இரவென்ன பகலென்ன பதுமையின் ராகம் முகாரிதான்
நெஞ்சை சுடும் இருள்த் திரை மூடிய நெஞ்சை
ஈரச் சாரலெடுக்கும் நகக்கீற்றுகள் விடுவதில்லை
தூய நினைவுகளை துருவித் துருவி துடிக்க வைத்து
விடை பெற்றுச் செல்கின்றன விழித் துவலைகள்
பட்ட மரம் அல்லவே படும் துயர் யாரறிவார்
ஒற்றை மனத்துயரின் அந்த இராத்திரிகளுக்கு
சாட்சி இல்லை !
Kavignar Valvai Suyen            

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...