samedi 13 février 2016

மலரென பிறந்தாய் நீ எனக்காக ......



மலரென பிறந்தாய் எனக்காக என் மனசை கவர்ந்தாய் உனக்காக
முல்லையின் எல்லை வென்றே நீ கொய்தாய் என்னை அதற்காக
ஒரு நாள் ஒரு நொடிப்பொழுதே உன்னிரு விழி பார்வையில்
நான் கலந்தேன்
நுகர் கொம் பென்பது எனக்கில்லையே
உன் காலடி ஓசை கேட்கின்றேன்
அலை கடல் தாண்டிய காற்றின் இறகில் உப்பெடுத்தே
உணவில் கலந்தவன் நான்
உனைத் தாண்டிய காற்றை மறித்தே என் தாகம் தீர
அருந்திவிட்டேன்
உயிரில் கலந்து உணர்வில் மிதந்து
உன் நினைவலைதானே உயருதடி
ஆயிரம் வாசல் இதயம் வேண்டேன்
ஒரே வாசல் ஒரே இதயம் நீ கொலுவிருக்க நான் தந்துவிட்டேன்
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...