jeudi 11 février 2016

அறுவடை நெல்லே ஆசி கொடு ....



ஏரிக்கரை தாழ்விலே ஓடம் நான்தான்
வாழ்விலே ...
இரவோ பகலோ தெரியவில்லை
இதயம் எங்கே காணவில்லை
பருவக் காற்றும் கொல்லுதடி
விழியில் ஈரம் இல்லையடி
ஆதவன் உறவை அறுத்துவிட்டால்
நிலவில் திலகம் இல்லையடி
எரியும் திரியின் நிழல் உருவாய்
உருகி கருகி சாய்கின்றேன்
அறுவடை நெல்லே ஆசி கொடு
அவளிடம் எந்தன் சேதி சொல்லு
ஈச்சஞ் சோலை வன இருப்பில்
இருக்கும் முள்ளே அவளென்று
கடல் அலை தேடும் கரை போலே
அவள் இதயம் தேடி அலைகின்றேன்
மெல்லத் தழுவும் பூங்காற்றே
அவளிடம் எந்தன் சேதி சொல்லு

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...