lundi 29 février 2016

February 29 ....



ஆண்டுகள் மலர்கின்றன எண்ணிக்கை வயசு கிமு கிபி
இருந்தும் மானுடா நீ அறியா வயசு உலகிற்கு
நூறாண்டு மலராய் மூங்கில் பூ
நான்காண்டு மலராய் பெப்ரவரி இருபத்தொன்பதின் பிறப்பு
நூறாண்டு போனாலே காலாண்டு வயசு இத்தினம் பிறப்போர்க்கு
யாரெவரோ இதற்கு கொடுப்பனவு
நான்காண்டிற் கொரு முறையே மலரும்
இவரின் பிறந்த நாள் பூ .....
Kavignar Valvai Suyen

samedi 27 février 2016

சொல்லிவிட்டேன் உன்னிடத்தில் .....



சின்னச் சின்ன ஆசைகளை சொல்லிவிட்டேன் உன்னிடத்தில்
அள்ளிக்கொள்கிறாய் ஆசைதீர உன் விழிகளால்
உன் மனம் எனும் வங்கிக் கணக்கில் வைத்து
தவணை முறையில் தருவதற்கே ...                        
Kavignar Valvai Suyen

vendredi 26 février 2016

ஆயிரம் வாசல் இதயம் வேண்டேன் ...



முல்லையின் எல்லை தாண்டி தொடுகிறாய் என்னை நீ
அந்த ஒருநாள் ஒரு நொடிப்பொழுதே பார்த்தேன் உன்னை
நினைவலையாகி நின் நிழலாகி
அறிகிறேன் உன் வரவின் காலடி ஓசை
கடல் தாண்டிய காற்றின் சிறகில் உப்பிருக்கும்
என்னை தாண்டிய காற்றில் உன் சுவாசம் நுகர்ந்தேன்
உயிரில் கலந்து உணர்வில் மிதந்து உன் நினைவலைதானே உயருதடி
அன்பெனும் ஆளம் எதுவரை என்பதை அறியேன் இன்னும் நான்
ஆழ் கடல் மூழ்கி அள்ளிவந்தேன் முத்துக்களை உனக்காக
ஆயிரம் வாசல் இதயம் வேண்டேன்
நீ குடியிருக்க வருவதென்றால் ஒரேவாசல் ஒரேஇதயம் தந்துவிட்டேன்   
Kavignar Valvai Suyen

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...