ஆசை அறுபது நாள் என்பதும்
மோகம் முப்பது நாள் என்பதும் பொய்த்தன..
இதழ் மலர்களின் இரகசியக் கடிதங்கள்
இங்கும் அங்கும் பருவ காலத் தேனீக்களாய்
மகரந்தப் பரிமாற்றங்களில்.....
மன்மதத் தேனீக்களே மலர்ந்தும் மலராத
கண்ணாம் பூச்சி விளையாட்டில்
உமதுறவில் ஒரு புது வரவு
வரவின் முன்னே
சிசுக் கொலைச் சேதாரங்கள்
தாளம் பூக்களே தாங்கவில்லை மனசு
அந்த இராத்திரிக்கு சாட்சி உண்டு
தீர்ப்புகள் திருத்தப் படும்வேளை
திரும்பி பாருங்கள் அங்கே உங்கள் முகம்...
Kavignar Valvai Suyen
''...ஆசை அறுபது நாள் என்பதும்
RépondreSupprimerமோகம் முப்பது நாள் என்பதும்
பொய்த்தன..
இதழ் மலர்களின் இரகசியக் கடிதங்கள்
இங்கும் அங்கும் பருவ காலத் தேனீக்களாய்
மகரந்தப் பரிமாற்றங்களில்.....'''
உண்மை சரியாகச் சொல்லப்பட்டுள்ளது...
சகோதரி வேதாக்கா உண்மைகள் என்றென்றும் ஊமையாவதில்லை எடை சாயா நீதியின் நடு நிலை அவரவர் மனங்களே நினைந்துருகி விழி நீர் சிந்தும் மனம் நீதியின் முன்னால் ஓர்நாள்...
Supprimerஅருமை...
RépondreSupprimerநன்றி என் தோழா திண்டுக்கல் தனபாலன்...
Supprimer