விழிச்
சிறகுகள் விரிய விரிய
மெல்ல
பதித்தேன் சுவடுகளை நீ வருவாயென!
விடை தந்து சென்றவனே
நீ விடியலை தரவில்லை
பறக்கிறேன் வீழ்கிறேன்
அழுகிறேன் சிரிக்கிறேன்
ஒற்றைச் சிறகை
காணவில்லை!
கரை தொட ஓடும் சமுத்திர அலைகளே
கூட்டிச் செல்லுங்கள் என்னை
எண்ணச் சிறகை உதிர்த்துவிட்டேன்
அந்த மணல் விரிப்பில் நான்
அமைதியுற வேண்டும்.
Kavignar Valvai Suyen
எண்ணச் சிறகில் லயித்து விட்டேன்...
RépondreSupprimerநன்றி தோழமையே அந்த மணற்பரப்பு அழைக்கிறது...
Supprimer