மலரென்ற
நினைப்பில் வர்ணங்கள் குளைத்தேன்
முற்கள்
தைத்தன நெஞ்சை நான் நான் என்ற மிகையே எனக்குள்ளே
ஏன் என்று கேட்டதில்லை உள்ளம்
பிறர் வாழ ஏதும் செய்தறியேன்
தற்பெருமை முற்களே முடி சூடின
நாம் என்று நினைந்தறியேன்
ஊர் என்ற உறவறியேன்
என்னையல்லால்
ஏதும் இல்லை என்றுருந்தேன்
நோய் வந்து பிணிகொள்ள
சேயாய் தாவுதே இக்கணம் என் மனசு
நெரிஞ்சி புதர்கள் என் நெஞ்ச நிறைவிருக்க
குறிஞ்சி நில வாழ்வு குசலம் கொள்ளும் என
ஏன் நினைந்தேன்
மலரே மறந்துவிட்டேன் உன்னை..
Kavignar Valvai Suyen
''.என்னையல்லால்
RépondreSupprimerஏதும் இல்லை என்றுருந்தேன்
நோய் வந்து பிணிகொள்ள....''' எல்லாம் மறந்தே ஆடுகிறோம்.....
ஆடாத ஆட்டங்களாட அச்சாரம் எங்கே வாங்கினோமோ தெரியவில்லையே வேதாக்கா.... சுட்ட பழத்தை தொட்டுக் காட்டினீர்கள்...
RépondreSupprimerசிந்தனை அருமை ஐயா...
RépondreSupprimerசிந்தனை சிற்பி திண்டுக்கல் தனபாலன் வந்தெனை வாழ்த்திட மகிழ்வுற்றேன்..
Supprimer