கல்விச்சாலை விட்டு
கை வீசி நடந்து வந்தேன்கடும் வெயில் சுட்டதென்று
கதிரவனை எரித்துவிட்டு
உச்சி மோந்து
மேனி எங்கும்
முத்தம் தந்தாள் என் அம்மா...
கொட்டும் மழை கண்டு
காகிதக் கப்பல் கட்டி
மழை நீரில் விட்டு வந்தேன்
உள்ளம் நொந்து என்னைத் துவட்டி
வென்னீர் ஒத்தடம் இட்டாள் என் அம்மா..
என்னை நினைந்தே அவள் வாழ்ந்திருந்தாள்
தன்னை நினைந்ததில்லை...
கொள்ளிக் கடன் எனச் சொன்னார்
இட் டெரித்தேன் தாய் மேனியை தீயில்
எரிவது உன்னுடல் அல்லத்தாயே என் மேனி
விழி நொந்து சுடு நீர் ஊற்று பெருகுதடி
உன்னையல்லால்
வேறொரு தெய்வம் அறியேனம்மா
இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால்
உனக்கே நான் தாயாவேன்
நீ என் பிள்ளையாய் பிறக்கவேண்டும்..
Kavignar Valvai Suyen
''...இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால்
RépondreSupprimerஉனக்கே நான் தாயாவேன்
நீ என் பிள்ளையாய் பிறக்கவேண்டும்..- ..'' -- இதுவே உண்மை அன்பு சுஜேன்.
சகோதரி வேதாக்கா அன்னையின் அன்பே ஆலயம் தாயிற் சிறந்த கோயில் இல்லை உங்களின் உண்மை அன்பை அறிவேன் மகிழ்ச்சி....
RépondreSupprimerதாய்க்கு ஈடு இணை ஏது...? உருக வைக்கும் வரிகள்...
RépondreSupprimerநண்பனே திண்டுக்கல் தனபாலன் நான் பட்ட கடனில் தீர்க்கப்படா கடனாக மீதம் இருப்பது தாயின் கடனே... தாய் அன்பில் உருகும் உனதன்பை கண்டும் கலங்கினேன்..
Supprimer