mercredi 11 mars 2015

செல்லரித்த வாழ்க்கை ...


பூட்டப் பட்டன இதயக் கதவுகள்
திசைமாறிய பறவைகள்,
பாலைவனத்தில்..
திரும்பவில்லை.!
காதலால் உளன்று கடமை நின்று
கண்ணியம் இங்கே சாகிறதே
கட்டுப்பாடெனும் வேலிக்குள்
முள்ளும் உண்டு மலரும் உண்டு
முகம் பார்க்கும் கண்ணாடியில்
விம்பம் அழுது தீர்த்தாலும்
செல்லரித்து போகிறது வாழ்க்கை ...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. திசைமாறிய பறவைகள்,
    பாலைவனத்தில்..
    செல்லரித்து போகிறது வாழ்க்கை ...
    எத்தனை சோக நிலைகள்...
    பித்தா! நிலையை மாற்று!
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  2. நிலை மாறும் வாழ்வில் எத்தனையோ சோக நிலைகள் பித்தனே நிலை மாற்று சிரிக்கும் அருள்வேண்டு எத்துயர் மலை சரிந்தாலும் நினைத்திடு இறையை அவன் அருளாலே அமைதி பெறும் மார்க்கம் எழுது உரைக்கின்றேன் உன்னிடத்தில் என பதிவு தந்தீர்கள் சகோதரி வேதா இன்புற்றேன் இனிது இனிது...

    RépondreSupprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...