இளைப்பாறிக் கிடந்தேன் ஓர் நாள் முற்றத்தின் மடியில்
முன்னோர் அருகே ஓரிடம் கிடைத்தது எனக்கும்
சம்பாசனை ஒன்று அருகே கேட்டுட
காதை, கொடுத்தேன்..
படைத்தவன் படைத்த கூடுருக்க
பதவிக் கதிரை மேலிருந்து
இரும்பறையில்
களஞ்சியக் கொள்ளை இட்டு வைத்தேன்
எதையும் எடுத்து வரவில்லை இங்கே
தன்னை, தனிமையில் தள்ளிவிட்டார்களே
என்றார் முதலாம் அவர்!
அட போங்க சாமி, எத்தனை நாள் கூவியிருப்பேன்
உங்கள் வாசலில் பசிக்கு உணவு தாருங்கள் என்று
கண்டுக்கவே இல்லை நீங்கள்..
குரல்வளையை பிடுங்கி விடுவேன் என்று
என்னைத் துரத்தியது உங்கள் வீட்டு நாய்
அந்த நாயின் வாயில்
எலும்புத் துண்டம் இருந்தது!
கொடுத்து வைக்கவில்லையே நான்
எதையும் உங்களிடம்
திருப்பித் தாருங்கள் என்று கேட்பதற்கு
கோபம் இல்லை வந்துவிட்டேன்..
உங்களின் பிருதுக் கென்று ஒரு பிடி
அமுது வைத்திருக்கிறார்கள்
எடுத்துத் தர என்னாலும் முடியவில்லை
புதியவரிடம் சொல்கிறேன் எடுத்துத் தருவார் அவர்
என்று என்னை பார்த்து பரிந்துரைத்தார் இரண்டாம் அவர்!
இரக்கத்தின் அயல் வீட்டுக்காறன் நான் என
என் விலாசத்தை அறிந்தவரோ இவர்
அவருக்காக அந்த ஒரு பிடி அமுதை
எடுத்துக் கொடுத்திட முனைந்தேன்
என்னாலும் முடியவில்லை!
வெட்கம் என்னை ஆட்கொள்ள அறிந்தேன்
நானும் இப்போது மண் அறையில் என்று...
Kavignar Valvai Suyen
''...வெட்கம் என்னை ஆட்கொள்ள அறிந்தேன்
RépondreSupprimerநானும் இப்போது மண் அறையில் என்று.....'''
இறுதியல் எல்லோரும் இங்கு தானே...
உண்மை...உண்மை.....சுயேன்...
எல்லோர்க்கும் இதுதான் நியதி எனும் மண்ணறை வாழ்வில் மனம் சாந்தியுற நன்றி உரைத்தீர்கள் சகோதரி வேதா.. ஒருநிலை நின்று நிம்மதி காண்கின்றது மனசு... மகிழ்ச்சி...
Supprimer