அன்னை உன் திருவடி சரணம் சரணம் தாயே
ஆத்மாவெனும் அருவுருவும் உன் கரு உயிரே
இகபரம் காண ஈன்றெமை வைத்தாய்
ஈடில்லா ஜனனமும் உடலுறு தோற்றமும்
உன் வயிற்று சிசுவே
ஊனொடு உயிரும் உடலுமாகி
எமதுறு வாழ்வில் ஏற்றமும் இறைத்து
ஏது பிழை நாம் செய்திடினும்
ஐயம் நீக்கி அறிவொடு அன்பும் தந்து
ஒரு நிலையாகி திருவுளம் கனிந்திடும்
ஓங்கார வடிவே உன் திருவடி பணிந்தோம்
ஔவியம் பெருக்கி அருட் கடல் நீந்தி
ஃஅகிர் தினையான அரிய வாழ்வினில்
அனு தினம் அகல் ஒளி தரும் தாயே
நின் பாதம் தொழுகின்றோம் யாமே
அகிலம் போற்றும் அன்னையர் தினம்தனில்
சரணம் சரணம் அம்மா ஆதி சக்தி நீயே
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...