jeudi 10 mai 2018

இச்சைக் கிளியே திரும்பிவிடாதே !!!

பொய் இழை புனைந்ததேன் உன் ஜாடை
மெய்யன்பு முள்ளாச்சே என் இதயத்தில்
பொன் பொருள் தேடி உருகினேன் 
பள்ளியறை பாவைக்கல்ல
அரியணைத் துணை அரசி உனக்கே உனக்கென
பகலிரவு நனையும் உன்னிதழென அறியேனடி
கரம் பற்றிய தொருவன் காமத்துக் கொருவன் 

சிகப்பு விளக்கே
உன்னை
குத்துவிளக்கென நினைந்தேனே
இலவம் பஞ்சல்ல இதயம் வெடித்ததடி
இனித்திட்ட நாடகளும் உப்புக் கரிக்கிதடி
இச்சைக் கிளியே திரும்பிவிடாதே
இல்லறம் பொய்த்ததடி

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...