கடை ஒன்று திறப்பு விழா
விற்பனைக்கு சவப் பெட்டி
அழைப்பிதழ் வைத்து
அழைக்கிறான் அன்பு நண்பன்
என்னென்று வாழ்த்துரைப்பேன்
தினம் தினம் ஊரில் விழும்
சாவை எண்ணி
சந்தோசம் காணும் தொழில்
மனம் கூச மண்ணை பார்த்து
கடை வாசல் ஏறினேன்
புன்னகை புரிந்தான் தோழன்
கண்ணகைத்தேன் காணவில்லை போலும்
கட்டப்பட்டிருந்த றிப்பனை வெட்டச் சொன்னான்
ஒரு கணம் இதயம் ஊடறுந்து உளறாதே என்றது
மங்கலம் உண்டாகட்டும் என்று எப்படி சொல்வேன்
றிப்பனை கத்தரித்து உச்சரித்தன உதடுகள்
கலகலவெனவே கல்லாவில் வாசம் செய்வாள் லக்ஷ்மி
இதில் நான் என்ன நீ என்ன ஆறோ நூறோ தோழா
இறுதியாய் உறங்கிச் செல்வேன் உன் கடை பெட்டிக்குள் என்றேன்
ஆரத் தழுவி முத்தம் இட்டு உத்தரவென்றான் அன்பு நண்பன்
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...