முகில் திரையாலே முத்தம் இட்டாள்
நீலச்சேலை கட்ட மறந்த மங்கை
வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள்
வெட்கம் அறியா ஏரிக்கரை கிளிகள்
ஆடை கட்டின !
வாசலிலே அழைப்பொலி கேட்டே
மெல்லத் திறந்தேன் ஜன்னலை
உத்தரவின்றி உள்ளன்போடு
உதட்டில் முத்தம் கொடுத்தாள்
வெண்பனி பாவை !
முற்கள் இல்லா பஞ்சணையின் கத கதப்பில்
உதடுகள் சிதைந்து ரெத்தம் சிந்தியது !
உச்சிமுதல் பாதம்வரை
பாதுகாப்பு கவசம் அணிந்துவிட்டேன்
உத்தரவாதம் இல்லா குளிர் நங்கையுடன்
கூடுதல் கூடாதென்றே... ....
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...