dimanche 26 novembre 2017

தமிழரின் இறைவனுக்கு அகவை 63

உயிரே உலகுரு தமிழின உள்ளொளியே
முது மொழி தமிழின் முக வடிவே
கார் மழை கூடலில் கார்த்திகை மலராய்
வங்க அலை தாலாட்டும் வல்வையிலே
அன்னை பார்வதி பெற்ற வடிவழகே பிரபாகரா

வானுயர்ந்து பெய்யும் மழை நீ
நீ தந்த நீர் பொசிந்து
தழிர் கொண்டே
யாம் உமை பாடுகிறோம்
அருள் ஞான வடிவே
உன்னடி முடி தேடுகிறோம்
வரம் தந்து தமிழீழம் காண வா தலைவா
சத்திய சோதனையின் நித்திலமே
நீ இன்றி யாம் வாழும் ஈழம் ஏதிங்கே

சூரியச் செல்வா சுதந்திர ஒளியே
அருள் வடிவான ஆரமுதே
நெடு நீழ் களம்தனில்
கொடும் துயர் களைந்தே
கருப் பொருளாணவன் நீ
அடர் வனக்காடும் அன்புடை தோழரும்
புடை சூழ் புலி படை கொண்டே
புறம் எரித்த அறமே
உன் திருவடி தொழ தேடுகிறோம் இறைவா
பிறந்தாய் நீ பிறந்தோம் உமதூரில்
அரு மருந்தே நீ வாழியவே வாழி       


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...