கண்ணே கண்ணே உன் கண்ணுக்குள் காயங்கள் கனவா நினைவா
கடலிலே கடல் புறா வஞ்சனை விரிப்பிலே வீழ்ந்ததும் நினைவா
கள வேலி போட்டு வைத்தோம் கடல் எல்லை வகுத்து வென்றோம்
ஏதிலியாய் போனதில்லை அந்த நாளிலே
வீர வியூகம் வென்று வென்று வீர விதை இட்டு வைத்தோம்
சொந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே
சாவுக்குள்ளே போர்க்களம் சந்ததிகள் வாழத்தானே
சுய உரிமை தேடிச் சென்றோம் தமிழீழம் காணத்தானே
உள் நாட்டுப் போரிலே ஊன்றிய வேர்ரறுத்து
பாரதப் படையணி பாதகம் செய்ததேன்
அமைதி அலை ஏறிச் சென்ற எம்கடல் புறாக்களை
வஞ்சக வலையினில் வீழ்த்தியே மாய்த்ததேன்
அமைதிப் படையென உலகெலாம் முத்திரை
அனாகரீக கழுகுகள் தமிழரின் குருதிப் புனல் குடித்ததேன்
எம்மை காத்தவர் எம் மண்ணை காத்தவர் சிறையினில் கிடப்பாரோ
சிங்கள இந்தியம் பின்னிய வலையினில் சிரம்தனை கொடுப்பாரோ
குமரப்பா புலேந்திரனும் உடன் பத்து வேங்கையும்
கொள்கையில் நஞ்சுண்டு தமிழீழமே தாகம் என்றார்
எங்கள் வீரர்கள் எங்கள் காவலர் எங்கள் மன்னவர் இவர்களல்லவா
அண்ணன் சொல்லின் வேதம் காத்த மாவீர மறவர்கள் உன் மாமான் அல்லவா
கண்ணே கண்ணே உன் கண்ணுக்குள் காயங்கள் கனவா நினைவா
கடலிலே கடல் புறா வஞ்சனை விரிப்பிலே வீழ்ந்ததும் நினைவா
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...