ஊர்
உறங்கி உறைந் தொழுக ஊளை நாய் ஒலி கேட்டும்
அன்னவன்
அருகமரும் வரவை எண்ணி
உறங்கா
விழி தனில் வளி நோக்கும் மான் விழியே
புன்னகை
செய்வார் கோடி
புறம்
பேசி அறம் கொல்வார் கோடி
உன்
நீதி காப்பேன் உயிரே
உன்
நிலை உயரணும் தங்கைச்சி
காதலின்
காதல் நீங்கி ஈருடல் ஒவ்வாதெனில்
கார்மேக
நீர்ரூற்றில் பருவம் துளிர்ப்பதில்லையே
பொய்யா
மொழி புனைந்து மன்னவனை வரவிருத்தி
பந்தி
பரிமாறி விருந்தோம்பும் வடிவழகே
கருக்கலிலே
விளக்கு வைச்சு விழிக் கோலம் போடு நீ
உன்
கோலம் கண்டார் கோடி யாலமதில் வெல்வாரோடி
இதை
காம நோயென கண்டவர்கள் சொன்னால்
சிற்பங்களும்
சற்பங்களாகி சந்ததியை சாபம் இடும்
சினம்
தணித்து பாடுவீர் காண் காதலுக்கோர் கீதம்
வையகம்
தனில் பெய்யெனப் பெய்யும் மழை
பாவலர்
வல்வை சுஜேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...