தோகை மயிலிறகாய் இமை வீசும் சாமரையே - கூர்
அம்போ உன் விழிகள் என் இதயத்தில் ஈட்டி
முனை
நேர் இழையால் கட்டி அணைத்து
கன்னம் இட்டு கன்னம் வைத்தாய் !
உன்
வண்ணம் நான் அறிவேன் என் எண்ணம் நீ அறிவாய்
அச்சாரம் நான் தாரேன் உன் முத்தாரம்
போதுமடி
தொட்ட குறை தீர்க்கவோ தோகை இறகெடுத்து
மை வண்ணம் தீட்டவோ
தந்து விட்டு போ பூவிதழ் முத்தம்
நாளைய புலர்வுக்குள் உன்னிடமே தந்திடுவேன்
தாமதம் ஏனடி தையலே, நீ எனக்காக
பிறந்தவளே....
பாவலர் வல்வை சுஜேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...