இன்பம்
இல்லை இனிமை இல்லை துன்பத் தூபம்
வாழ்வெலாம்
தூபம் தூவ
இறுதிப்
புள்ளி எங்கே என தேடும் மனமே
தேடல்
வேண்டும் உயர்வுக்கே தாழ்வென்று தளராதே
துறவறம்
கொள்வதில்லை வாலிபம் வாழ்ந்தே மாள்கிறது
வயசாகும்வரை !!!
ஒரு நாளேனும் ஒரு
கை ஓசை ஒலித்ததுண்டோ
வாழும்வரை வாழ்வுயர்
கொள்வோம்
வானம்
வீழ்வதில்லை
இரவின் மடி
அழைக்கிறது உயிரே உன்னை தாலாட்ட
உறங்கி எழு நாளை
உனக்கான மறுமலர்ச்சி புலரும்
காலம் போனால்
திரும்புவதில்லை கலங்காதே
உனக்கும் ஒரு
காலம் வரும்...
பாவலர் வல்வை
சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...