mercredi 17 août 2016

தொட்டும் தொடாத காதல்!!!



தொட்டும் தொடாத காதல் கதிர் பட்டுக் கலைந்த தென்ன மாயம்
ஏக விரதன் நானே அழகே அலையாய் தழுவித் தணிப்போம் தாகம்
தோகைக் கூந்தலாடும் மயிலே கோதும் விரல்கள் உன்னில் கோபம்
பரிசம் போட்டு வந்தும் தரிசன விரசம் தொடாத பந்தம்

வெட்ட வெளி வானத்திலே அந்த நிலா நீ வெக்கம் விட்டு
பக்கம் வந்து அணைக்கிறாயே இன்ப உலா        
தொட்டணைக்கத் துடிக்கும் நீ என் தோழன்தான்
தாலி கட்டும் முன்னே காண வேண்டாம் சந்தோச காணம்தான்

கூட்டாச்சி முறையிலே கூடி வாழ வந்தேன்டி
கூதலுக்கு போத்துக்கணும் கூந்தல் கொஞ்சம் தாயேன்டி                  
தந்தி அடித்துத் தர்க்கம் பண்ணும் முந்திரிப் பருப்பே
ஆம்ஸ்ரோங் மீண்டும் வரமாட்டான் வாறேன் முன்னே
உந்தன் நிலா உனக்குத்தான் உயரே நீயும் பறக்காதே
நாளம் அறுந்த வீணையானால் நடைச்சாலையில் வீழ்வேன் நானே
மஞ்சள் குளித்து மருதாணி பூசும் பெண்ணே அஞ்ச வேண்டாம்
தாவணிக் கனவில் மோகினி வந்தாள் மோசம் செய்யேன் அறிவேன் நானே
மூணு முடிச்சு போட்ட பின்னே மஞ்சம் காண்போம் அன்றே வாறேன்...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...