உச்சி மலைச் சாரல் கொஞ்சும் பசும் மேனி
கோவை இதழ் கொஞ்சும் கருணை
ஒத்தையிலே ஓர் கிளி !
ஒத்தை மரமாய் நான் இருக்கக் கண்டு
வரி வளை குலுக்கி வா வா என்றாள்
இணை சேர்ந்து கிளை அமர்ந்து கீக்கீ
என்றேன்
கிளியல்ல கீதை அல்ல கிளி மொழி பேசும்
மோகினி அவள் !
அர்த்த ராத்திரியென்ன உச்சி
வெய்யிலிலும்
உக்கிர தாண்டவம் ஆடி இனிய கானம்
பாடுகிறாள்
ஏட றியேன் எழுத்தறியேன் ஏதோ சொன்னேன்
கவி யென்றழைத்தே தேக நரம்பெங்கும்
சுரம் மீட்டுகிறாள்
இது போதும் எனக்கு இது போதும் எனக்கு
இரவென்ன பகலென்ன தொடும் வானம்
தூரம்தான்
யென்மங்கள் எழே ஏழில் ஏதோ ஒன்றில்
எழுதிவிட்டாள் போலும் தன் சுய சரிதை
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...