பொய்யிலே புனைந்த வாழ்க்கை - இருந்தும்
மெய் அன்பிலே நனைகின்றேன் இது உண்மை பொய்யும் மெய்யும் இன்று யாரிடத்தில் இல்லை
உள்ளரங்கத்தில் இருக்கும்வரையில்
எதற்கும் உருவம் இல்லை
ஒற்றையடிப் பாதை கண்ட இரு விழிகள்
ஒரு விழி போதும் என்று ஒன்றை மூடுவதில்லை
எமது எண்ணக் கோலத்தின் நிறங்களே ஏழு
அதனை ஈரக்காத்தில் இழுத்து வளைத்து
சலவை போட்டுத் தருகிறான் சூரியன்
பொய்யே சொல்லாதவன் நீ எனச் சொன்னாலும்
அட அவனுக்குத்தான்டா வெளிச்சம்....
Kavignar Valvai Suyen
உள்ளரங்கத்தில் இருக்கும்வரையில்
RépondreSupprimerஎதற்கும் உருவம் இல்லை... --
உண்மை இவை எழுத்தாக வரும் போது
உருவம் பெறுகிறது.
நம் அதிஷ்டம்.
வேதா. இலங்காதிலகம்
எழுத்தால் உருவமைத்து கண்ணுற்று கழிப்புறும் மானுடா இதுவே நாம் பெற்ற அதிஷ்டம் என அக அழகை எழுத்தில் பொறித்து ஒளியிட்டு அதிஷ்டம் பகன்றீர்கள் சகோதரி வேதா இன்புற்றேன்...
Supprimer