பெண்ணின் புருவமதை வில்லென்றார்!
பொய் என்றேன்...அவள் விழியை அம்பென்றார்!
பொய் என்றேன்...
என் இதயத்தை அவள் திறந்தபோதில்
அனைத்தும் உண்மை என்றேன்!
வெற்றுக் காகிதமாய் நான் கிடக்க
மை விழியால் அவள் எழுத
எச்சில் முத்தத்தில் என் நரம்புகளில் ஏதேதோ
அர்ச்சனை பூக்களாய் என் மார்பில் அவள்
மெய் சிலிர்த்த இறைவனாய் நான்
ஏடெழுதி படிக்கவில்லை
ஏந்திழையானாள் அவள் என்னிடத்தில்
நினைவில் ஒரு கணம் நியத்தில் மறுகணம்
தினசரி மலராய் என் ஓர விழிப் பார்வையில்
அவள் தினம் தினம்
இதுதான் காதல் என்றால்
உள்ளங்கை இதயத்தை இன்னும் கொஞ்சம்
பெரிதாய் படைத்திருக்கலாம் இறைவன்
பூப்பூவாய் பூக்கிது காதல்
இன்று எனக்குள்ளும் இது எப்படி
வயசுக்கு வந்துவிட்டேனா நான்..
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...